சாலையில் விழுந்து உடைந்த ஆசிட் பாட்டில் - பீதியடைந்த வாகன ஓட்டிகள்

சாலையில் விழுந்து உடைந்த ஆசிட் பாட்டில் - பீதியடைந்த வாகன ஓட்டிகள்

திருச்சி உறையூர் குழுமணி சாலையில் லிங்க நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து குப்பைகளை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டிகளில் நாள்தோறும் சேகரித்து செல்வார். இந்த நிலையில் குழுமணி சாலை லிங்கநகர் பிரதான சாலையில் மாநகராட்சி சொந்தமான குப்பை வண்டி முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது அந்த வண்டியில் இருந்த பிளாஸ்டிக் ட்ரம் கீழே விழுந்தது. அதிலிருந்து பாட்டில்கள் வெடித்து புகை கிளம்பியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி வண்டியில் அமர்ந்திருந்த தூய்மை பணியாளர் உடனடியாக வண்டியை நிறுத்தி வேகமாக ஓடி வந்து சாலையில் விழுந்து உடைந்த பாட்டில்களை அப்புறப்படுத்தினார்.

மாநகராட்சி குப்பை வண்டிகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து எடுத்துச் செல்லப்படுவது நடைமுறையில் உள்ளது. ஆனால் இது போன்ற அபாயகரமான பொருட்களை எந்த பாதுகாப்பும் இன்றி தூய்மை பணியாளர்கள் எடுத்து செல்கின்றார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது.

ஏற்கனவே மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ள சிறிய குப்பை வண்டியில் வண்டி முழுவதும் நிரம்பி வழியும் அளவிற்கு குப்பைகளை எடுத்துச் செல்கின்றன வேகமாக செல்லும்போது அவை சாலையில் சிதறி பெரும்பொழுதும் குப்பை கிடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது இந்த நிலையில் தற்போது ஆசிட் பாட்டில் கீழே விழுந்து உடைந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.