மேக்கப்...கலை வடிவமாக பார்க்கவேண்டும்!
அழகுபடுத்தும் கலை என்பது பெண்களுக்கான வரம் என்றே சொல்லலாம். மேக்கப் போட்டதே தெரியக் கூடாது. ஆனாலும் பளிச் லுக் வேண்டும். முக்கியமா, பட்ஜெட் எகிறக் கூடாது’ என்ற ஆர்வம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும்.அவர்கள் தான் என்னுடைய வாடிக்கையாளர்கள் என்கிறார் திருச்சியை சேர்ந்த ஜெர்லின். சிறு வயது முதல் எனக்கு அழகுகக்கலை மீது அதிக ஆர்வம் உண்டு. ஆனால் வீட்டில் எனக்கு அனுமதி அளிக்கவில்லை திருமணத்திற்கு பின் எனது கணவர் என்னுடைய விருப்பத்தை கேட்டு தெரிந்துகொண்டு என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அனுமதி அளித்தார்.
2013இல் அழகுக்கலை குறித்து பயிற்சியையும் முடித்துவிட்டு சிறிய பார்லர் தொடங்கினேன். நாளடைவில் என்னுடைய கடின உழைப்பும் இந்த தொழிலின் மீது இருந்த ஆர்வமும் ரியாக் மேக்கப் பார்லர், ரியா ஜுவல்லரி, மேக்கப் அகாடமி என்று வளர தொடங்கியது. 11 ஆண்டுகளாக மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறேன்.என்னுடைய கணவர் அளித்த ஊக்கமும் தாங்க நம்பிக்கையுமே என்னை தொடர்ந்து பயணிக்க வைத்தது பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், என் கணவர் மட்டுமே எனக்கு பக்கபலமாக இருந்தார்.
அதன் வெற்றியாக 1000 ரூபாய் முதல் இன்று லட்சம் ரூபாய் வரை இதிலிருந்து வருமானம் ஈட்டுகிறோம். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அழகு கலைக்குழு வைத்து பயிற்சி அளித்து வருகிறேன். கல்லூரிகளுக்கு சென்று கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளேன். என்னிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் இன்று தனியன அகாடமி பார்லர் என ஆரம்பித்து அவர்களும் ஒரு தொழில் முனைவராக மாறி உள்ளனர். எனது வளர்ச்சியின் அடுத்த கட்ட வெற்றி ஆக கருதுவது நேச்சுரல் பிராண்டின் நிறுவனராக இப்போது திருச்சி மணப்பாறை நேச்சுரல்ஸ் நடத்தி வருகிறேன்.
எந்தத் துறையாக இருந்தாலும் அப்டேட்டாக இருக்கணும். இவ்வாறு நான் புதிதாக கற்றுக் கொள்ளும் விஷயங்களை பயிற்சி அளித்து வருகிறேன். மேக்கப் என்றால் முகத்தை அழகுப்படுத்துவது மட்டுமில்லை, ஒரு சேலையை எப்படி அயர்ன் செய்து பர்பெக்டாக கட்டணும் என்பதும் இந்த கலையை சார்ந்ததுதான். மேலும் ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது என்ன மாதிரி உடை அணியணும் அதற்கான அணிகலன்கள் என்ன என்பது குறித்தும் சொல்லித் தருகிறேன்.
இன்றைய தலைமுறையினருக்கு மேக்கப் குறித்து ஒரு ஆர்வம் இருக்கிறது. காரணம் முன்பு போல் இல்லாமல் மேக்கப் ஒரு கலை வடிவமாக மாறியுள்ளது’’ என்றவர் இதனை பகுதிநேர வேலையாகவும் செய்யலாம் என்றார். ‘‘இல்லத்தரசிகள் தான் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ள வருகிறார்கள். வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் ஏதாவது கற்றுக்கொண்டு அதன் மூலம் வருமானம் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தில்தான் வருகிறார்கள்.
பயிற்சிக்கு பிறகு அழகு நிலையம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுதி நேரமாகவும் இதனை செய்யலாம். மாதம் இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் என்று செய்தால் போதும் ஈசியாக சம்பாதிக்கலாம். https://www.instagram.com/riyamakeoverartistry?igsh=MWltOGp5aW1iZWN0bA என் கணவரின் பக்கபலம் போன்று என் குழந்தைகளும் எனக்கு உதவினர் என்றே கூறலாம்.வயது குறைவாக இருந்தாலும் நான் வெளியில் செல்லும்போது அவர்கள் இதுவரை அடம்பிடிக்காமல் இருப்பதே என்னுடைய பயணத்தில் தடை ஏதும் இல்லாமல் இருப்பதற்கான காரணம்.
குடும்பத்தை சரியாக கவனித்துக்கொண்டு நம்முடைய தொழிலிலும் நாம் வெற்றி பெறலாம் அதற்கு நம் மீது யாரோ வைக்கும் நம்பிக்கை தாண்டி நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது என்கிறார் ஜெர்லின்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision