திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித் துறை தலைவர் டாக்டர் பிரசன்ன பாலாஜிக்கு சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருது!
திருச்சி தேசிய கல்லூரி துணை முதல்வரும் உடற்கல்வி துறை தலைவருமான டாக்டர் பிரசன்னபாலாஜி தேசிய அளவில் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருதை பெற்றுள்ளார். பிசிக்கல் எஜுக்கேஷன் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பானது உடற்கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களை தேர்வு செய்து தேசிய அளவில் விருது வழங்கி வருகிறது.
இந்த நிலையில் பிசிக்கல் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா (PEFI)சார்பாக ஐந்தாவது முறையாக நடைபெறும் இவ்விருது விழாவில் உடற்கல்வி துறையில் சிறந்து செயல்பட்டதற்காக இந்த வருடம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதாகவும் தேசிய அளவில் திருச்சி தேசிய கல்லூரி துணை முதல்வரும் உடற்கல்வி துறை தலைவருமான டாக்டர் பிரசன்னபாலாஜி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த உடற்கல்வி ஆசிரியருக்கான டாக்டர் ஜி.பிகௌதம் விருது வழங்கப்பட இருந்தது இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று (11.03.2022) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கான டாக்டர் ஜி.பிகௌதம் விருதை டாக்டர் பிரசன்ன பாலாஜி பெற்றுக்கொண்டார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் டிஜி சந்திப் பிரதான் இவ்விருதினை வழங்கியுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO