இலக்கிய ஆளுமையால் உலக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ள திருச்சி  இளைஞர்

இலக்கிய ஆளுமையால் உலக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ள திருச்சி  இளைஞர்

இன்றைய புத்தக வாசிப்பாளர் நாளைய வரலாற்று  தலைவர்கள் என்று ஒரு வாக்கியம் உண்டு.
 எழுத்தாளர்,பேச்சாளர், கவிஞர் சமூக ஆர்வலர்,  என பன்முகத் தன்மைகொண்ட  திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டடுவை சேர்ந்த  ஜான் பிரிட்டோ, ஜோனி தனசீலியின்   மகனான ஜோசன் ரஞ்சித் 22 வயதிலேயே  இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாய் உலக மனித உரிமைகள் ஆணையத்தின் நிரந்தர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 இவரின் தமிழ் ஆளுமையூம்  ஆங்கிலப் புலமையையும் நம்மை வியப்பில் தான் ஆழ்த்தும்.
 திருச்சி புனித வின்சன் மெட்ரிக் பள்ளி மற்றும் கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பின்பு சேலம் இலயோலா கல்லூரி மெட்டாலாவில்  ஆங்கிலத் துறையில் இளங்கலைப் பட்டமும் முடித்துள்ளார். 
தந்தை  ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தாயும் பள்ளி ஆசிரியர் என்பதால் வாசிப்பு பழக்கம் சிறுவயதிலேயே பிடித்தமான ஒன்று.

 அரும்பு இதழில் மாணவர்களின் கவிதைகள் பார்த்து 8வகுப்பு படிக்கும்போதே கவிதை எழுத தொடங்கியுள்ளார்.  ஆசிரியர்களின் ஊக்கத்தால் பள்ளிகளில் நடக்கும் நாடகங்களுக்கும் கதை எழுதத் தொடங்கியிருக்கிறார். 
இப்படி தான் இந்த கவிஞனின் பயணம் தொடங்கியது.

 இன்றைக்கு ஆங்கில மற்றும் தமிழ் வழியில் 7 புத்தகங்கள் 140 நாடுகளில் Flipcart, Amazon  மூலம் வெளியிட்டு உள்ளார். 

INSPIRING. YOUTH LEADER OF SOUTHERN INDIA,YOUTH ICON OF TAMILNADU,EDUCATION ICON OF TAMILNADU, MANOF EXCELLENCE என உலக அளவில் 5விருதுகளும், 5இந்திய அளவிலான விருது, 7 தமிழக அளவிலான விருதுகளும் பெற்றுள்ளார். இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், தமிழக முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரிடமும் விருதுகளும் வாழ்த்துக்களும் பெற்றுள்ளார். 

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளோடு இணைந்து NO NOTE FOR VOTE  என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தி உள்ளார். 

இத்தனை பெருமைகளுக்கும் உரிமையுள்ள ஜோசன் ரஞ்சித்  நம்மோடு பேசும் போது முகமலர் புன்னகையில் தமிழ் ஆளுமையோடு பேசத் தொடங்கினார் ,
ஆசிரியர்களின் பிள்ளை என்பது எனக்கு மிகவும் பொருந்தும்.
 என்னை இந்த அளவிற்கு ஊக்கப்படுத்தியது பெற்றோரும் ஆசிரியர்களும் தான்.
 ஆசிரியர்கள் வழிநடத்தும் பாதையில் இன்றும்  பயணித்துக் கொண்டிருக்கிறேன். 

தமிழ் அடித்தளமும் ஆங்கில அனுபவமும் இந்த உலகை நம் கைக்குள் கொண்டு வரும்  என்று என்  ஆசிரியர் கூறிய வரிகளே என் வெற்றி ரகசியம் என்பேன்.சிறுவயது முதலே புத்தகங்கள் படிப்பது  எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று 
ஆசிரியர் ஒரு கை, புத்தகங்கள் ஒருகை என்று என் இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு என்னை வழிநடத்தியது புத்தகங்களும் ஆசிரியர்களும் தான். 

ஏழு புத்தகங்கள் இதுவரை எழுதியுள்ளேன் ,என்னுடைய முதல் புத்தகம்  கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுது 2018 ஆம் ஆண்டு விவசாயம் சார்ந்த "ஒரு பரதேசியின் தொடக்கம்" என்ற பெயரில் வெளியிட்டேன்.
 முக்கியமாக நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது என்னுடைய மூன்றாவது புத்தகத்தை பற்றிய வரலாறு தான். 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின்  அரசியல் ஆளுமையும் அவருடைய தமிழ் புலமையும் என்னை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்தும். அவர்மீதான தீராபற்றால்  மூன்றாவது புத்தகம் அவர் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன திட்டங்கள் செய்திருப்பார் இன்னும் தமிழுக்கு என்னென்ன பெருமையாற்றி இருப்பார் என்று "அன்பு உடன்பிறப்பே" என்ற தலைப்பில் எழுதினேன். 

அப்புத்தகத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். 
அந்தக் கவிதைத் தொகுப்பை தொடர்ந்து கலைஞர் அவர்களின்  புகழ் அஞ்சலியில்  ஒரு கவிஞனாக என்னை பேசுவதற்கு வாய்ப்பு அளித்தனர்.
என்னுடைய அடுத்த இரண்டு புத்தகங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.
தமிழ் மொழி புத்தகமான" நழுவி நழுவி" என்ற புத்தகத்திற்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
DUDE எனும் ஆங்கில புத்தகத்திற்கு 2 மத்திய அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளனர்.

இன்றைக்கு முகநூல் பக்கங்களில் அல்லது நாம் பகிரும் தகவல்களை இரண்டு வரிகளுக்கு மேல் படிக்க தயங்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இலக்கியத்துறையில் இத்தனை சாதனைகளையும் புரிந்து  நூல்களை எழுதிக் கொண்டு இளைய சமுதாயத்திற்கு இளம் ஆளுமையாய்  மாறி இருக்கிறார் கவிஞர்  ஜோசன் ரஞ்சித்.

திருச்சி விஷன் செய்திகளை உடனுக்குடன் அறிய

https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx