இன்று ( 24.05.2021 ) 100 பேர் மீது வழக்கு, 450 வாகனங்கள் பறிமுதல். 

இன்று ( 24.05.2021 ) 100 பேர் மீது வழக்கு, 450 வாகனங்கள் பறிமுதல். 

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

இருப்பினும் பொது இடங்களில் மக்கள் 
முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் 
தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கு 24.05.2021 முதல் 31.05.2021 வரை அமலில் உள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி, திருச்சி மாநகர 
எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி இன்று முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது நாள் வரை 5177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு இன்று வரை விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதில், இன்று மட்டும் 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx