பக்தர்கள் இன்றி ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் எழுந்தருளி நெல் அளவு கண்டருளும் வைபவம்

பக்தர்கள் இன்றி ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் எழுந்தருளி நெல் அளவு கண்டருளும் வைபவம்

பூலோக வைகுண்டமானதும், 108- திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கோடைகால வசந்த உற்சவம் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு வசந்த உற்சவம் வைபவம் கடந்த 18ம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும்  வசந்த உற்சவதினத்தின் போது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சக்கரத்தாழ்வார் சன்னதியனருகே உள்ள வசந்த மண்டபம் எனப்படும் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி  வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான இன்று மாலை  நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கொட்டார வாசலில் நெல் அளவு கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளுக்கு அலங்காரம் அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டு அருளினார். அதனைத் தொடர்ந்து இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாள் நெல்லை அளவை கண்டருளும் வைபவத்தை கண்டு தரிசனம் செய்து செல்வர்.

கொரோனா தொற்று காரணமாக 2-ம் ஆண்டாக பக்தர்கள் இன்றி இவ்விழா நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான 9-ம் நாள் வரும் 26-ம் தேதி அன்று  ஏகவசந்தம் என்றழைக்கப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. அன்று நம் பெருமாள் ஆழ்வான் திருச்சுற்று வலம் வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளி திருமஞ்சனம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx