குழந்தை கடத்தல் - வாட்ஸ்அப் குரூப்பில் ஆடியோ வெளியிட்ட இளைஞர் கைது.

குழந்தை கடத்தல் - வாட்ஸ்அப் குரூப்பில் ஆடியோ வெளியிட்ட இளைஞர் கைது.

கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவது சம்மந்தமாக வதந்திகள் விஷமிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இதனை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிடுகின்றனர். இது போன்று குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த (08.03.2024)-ஆம் தேதி, சமூக வலைத்தளங்களில் இது போன்று வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த (13.03.2024)-ஆம் தேதி முதல் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதவத்தூர் கிராம பகுதிகளில் அதவத்தூர் கிராமத்தில் குழந்தை கடத்துபவர்கள் வந்துள்ளதாகவும், குழந்தைகள்ளை கடத்த காரில் வந்து இறங்கியுள்ளதாகவும், Whatsapp குரூப்பில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொய்யான செய்தியை பரப்பியது தொடர்பாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண். 9487464651 மூலம் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், உத்தரவின் பேரில், சோமரசம்பேட்டை காவல்துறையினர் மேற்படி குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தியை பரப்பிய குழுமணி, பேரூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொன்னார் மகன் மகாமுனி (25), என்பவரின் மீது சோமரசன்பேட்டை காவல்நிலைய குற்ற எண் 77/2024 U/s 500, 505, (1) (b), 504 IPC-ன் படி வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision