திருச்சி அதிமுக வேட்பாளர் தேர்வு - சூடு பிடிக்கும் களம்

திருச்சி அதிமுக வேட்பாளர் தேர்வு - சூடு பிடிக்கும் களம்

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு முடிவற்று தங்களது கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி மாவட்டம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பது ஒரு நம்பிக்கை.

அந்த வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தங்களது கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய தேமுதிகவுக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குளந்தராம்பட்டைச் சேர்ந்த கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 24-ஆம் தேதி திருச்சியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.ஏற்கனவே மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிடுகிறார். உள்ளூர் வேட்பாளர் ஒருவர் திருச்சி அதிமுகவில் களமிறங்க உள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதி களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision