' காதலர்கள்' சரணாலயம் என பேசிய திமுக எம்எல்ஏ - அதிர்ந்த அமைச்சர்
திருச்சி அய்யாளம்மன் படித்துறை அருகே 13 கோடியே 70 லட்சம் செலவில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசும் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது மெய்சிலிர்க்கிறது. பறவைகள் சரணாலயமாக இருந்தது தற்பொழுது காதலர்கள் சரணாலயமாக மாறிவிட்டது. அங்கங்க காரை போட்டு கொண்டு ஹாயாக பேசிக்கொண்டு உள்ளனர் என எம்.எல்.ஏ பேசிய பொழுது, அமைச்சர் நேரு பூங்காவை பற்றி பேசு வேறு எதும் பேசதா என்றார். முக்கொம்பை சீர் செய்து கொடுக்க வேண்டும். முக்கொம்பு மேலூர் பகுதி காடுகள் பகுதியாக அதிமாக உள்ளது. வனவிலங்கு சரணாலயம் ஒன்றை அமைத்து தர வேண்டும். வண்ணத்துப்பூச்சி பூங்காவில் இருந்து பழூர் மற்றும் நொச்சியம் பகுதிக்கு தடுப்பணையுடன் கூடிய பாலம் அமைத்து தந்தால் நன்றாக இருக்கும்.
ராமநாதபுரம், சிவகங்கை, மணப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டங்கள் இருப்பதால் ஸ்ரீரங்கம் தொகுதி வறட்சியாக உள்ளது. போர் போட்டாலும் தண்ணீர் வராத நிலை உள்ளது. விவசாயம் பண்ண முடியாத நிலை இந்த தொகுதியில் உள்ளது. தடுப்பணையுடன் கூடிய பாலம் அமைத்து தந்தால் போர் போட்டு தண்ணீர் எடுத்துக் கொள்வோம். நகராட்சி நிர்வாக துறை அமைச்சரால் எங்கள் தொகுதிக்கு செய்து தர முடியும் என்பதால்செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
பறவைகள் சரணாலயம் அடிக்கல் நாட்டல் நிகழ்ச்சியில் அமைச்சர், ஆட்சியர், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கோட்டதலைவர்கள் அமர்ந்திருந்த மேடையில் எம்.எல்.ஏ பேசியது சிரிப்பலையும் வந்தது. ஆனால் ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினரே பேசியது அதிகாரிகளுக்கு சிறு சங்கடத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.