பதிவு எண் இல்லாமல் பைக் ஓட்டிய தி.மு.க வி.ஐ.பி.,க்கள்

பதிவு எண் இல்லாமல்  பைக் ஓட்டிய தி.மு.க வி.ஐ.பி.,க்கள்

மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரசார பேரணியை, கடந்த 15ம் தேதி, தி.மு.க., இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன், தொடங்கி வைத்தார். இருசக்கர வாகன பேரணி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்- அமைச்சர் மகேஸின் திருவெறும்பூர் தொகுதி வருகை புரிந்தது.


அமைச்சர் மகேஷ் பேரணியில் வந்த இளைஞர்களை வரவேற்று, திருவெறும்பூர் தொகுதிக்கான பிரசாரத்தை அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பால்பண்ணை முதல் காட்டூர் பெரியார் சிலை வரை அமைச்சர் இருசக்கர வாகனத்தை ஓட்டினார்.  

அதில், பங்கேற்ற மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர்  செயலாளர்கள் பங்கேற்றனர்.இருசக்கர வாகன பேரணியில், மதிவாணன், மாஜி எம்.எல்.ஏ., சேகரன் ஆகியோர் ஓட்டிய வாகனங்கள் பதிவு எண் இல்லை. பொறுப்பில் உள்ளவர்களே, பொறுப்பில்லாமல், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது விதி மீறில் ஆகாதா? என்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அமைச்சர் மகேஸ் ஓட்டிய புல்லட்டில் பதிவு எண் இருந்தது குறிப்பிடதக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision