திருச்சிராப்பள்ளி சர்வதேச விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமானநிலைய குழு உறுப்பினர்கள் (Aerodorme Committee Members) கூட்டம் 15.07.2021 நேற்று விமானநிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் அவர்களால் நடத்தப்பட்டது.
இந்த குழுவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டு கூட்டமானது நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் தலைமையேற்ற விமானநிலைய குழு உறுப்பினர் தலைவர் பேசுகையில்,
பாதுகாப்பு கருதி அடிப்படை தேவைகள் மற்றும் தொழிநுட்ப விபரக்குறிப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை,விமானநிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரம் ட்ரோன் பறப்பதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து, ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட விபத்துக்கள் போன்று எவ்வித விபத்துக்கள் ஏற்படா வண்ணம் ட்ரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை தக்க உபகரணங்களுடன் எதிர்கொள்ள ஆலோசனைகள் கேட்கபட்டது.
விமானநிலைய விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் அம்பேத்கர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியினை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் / குடிசை மாற்று வாரியம் மூலமாக உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது,தேசிய நெடுஞ்சாலை 210 விமான ஓடுதளத்தில் அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி தரைவழிப்பாலம் அல்லது சாலையின் உயரத்தை குறைப்பதும் குறித்து ஆலோசிக்கபட்டது.
விமான கடத்தல் ஒத்திகையின்போது தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களையும் வைத்து ஒத்திகை செய்வது ,CCTV அதிகமாக வெளிப்பகுதிகளில் அமைத்தால் கடத்தல் செய்பவருக்கும், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவரையும் எளிதில் கண்காணித்து கடத்தலை தடுக்க முடியும் என்றார்,பொன்மலை சரகம் உதவி ஆணையர், விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும்,
விமானநிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் பகுதியில் காவலர் சாவடி அமைப்பது பற்றியும் விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துஆலோசிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM