முதியோர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள்
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்று துறை சார்பிர் பல சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளில் மாணவர்களும் கல்லூரி பேராசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வரலாற்றுத் துறையின் துறைத்தலைவர் ஃபெமிளா கூறுகையில்... மாணவர்கள் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என்ற முயற்சியை தொடங்கும் பொழுது பல மாணவர்கள் தன்னார்வமாக வந்தனர்.
எனவே இது பொதுமக்களுக்கு எளிய வகையில் சென்று சேர வேண்டும் என்பதற்காக சோமரசம்பேட்டை போன்ற கிராமப்புற மக்களிடம் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு நன்னெறி கதைகள் சொல்லி அவர்களை ஊக்குவித்து தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்காக அவர்களை வழி நடத்தி வருகின்றோம்.
சமுதாய கூடங்களில் மாணவர்களை தனித்தனி குழுவாக அமர வைத்து அவர்களுடைய வகுப்பு பாடங்களினை மாணவர்கள் கற்றுத் தருகின்றனர்.
மாலை நேரங்களில் அங்கு உள்ள முதியோர்களுக்கு நிலா பள்ளி என்ற பெயரில் இதுவரை எழுத்தறிவு இல்லாத முதியோர்களுக்கு அவர்களுடைய பெயரை கையெழுத்து இட கற்று தருகின்றோம். திருச்சி புத்தூரில் உள்ள பார்வை திறன் குறைபாடு உடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்கியுள்ளோம்.
சமூக சேவைகளில் மாணவர்களும் ஈடுபடும் போது வரும் காலங்களில் இந்த சமூகத்தின் மீதான அக்கறை உள்ள மனிதர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC