உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அளுந்தூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா
வாழ்ந்து காட்டுவோம் திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சியில் வட்டார திட்ட மேலாண்மை அலகில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 04-06-2022 சனிக்கிழமை அன்று மரம் நடும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. கமலம் கருப்பையா அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். ஊராட்சி மன்றத் தலைவர் எமில்டா லில்லி கிரேஸி ஆரோக்கிய சாமி அவர்கள் மரக்கன்றுகளை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கினார். நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளைச்சாமி அவர்கள் சிறப்புறையாற்றினர்.
செயல் அலுவலர்கள் அன்புநிதி, மற்றும் திருமுருகள் ஆகியோர் சுற்றுசூழலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். மணிகண்டம் வட்டாரத்தின் 22 ஊராட்சிகளிலும் தலைவர்கள் முன்னிலையில் தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கும் தலா 50 மரக்கன்றுகள் வீதம் 1100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார அணித்தலைவர் சம்பத்குமார் சிறப்புற ஏற்பாடுகளை செய்திருந்தார். பசுமையை நோக்கிய பயணத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார பணியாளர்கள் பொன்னழகு மற்றும் நாகஜோதி ஆகியோரும் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய..