டிஜிட்டல் பணிப் பதிவேடுகள் முறையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

டிஜிட்டல் பணிப் பதிவேடுகள் முறையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

டிஜிட்டல் கையொப்ப முறை தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் போன்ற அனைத்து பணப்பயன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்போது நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் வடிவிலான கையொப்ப முறைக்கு மாற்ற அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த நடவடிக்கையாக அரசு பணியாளர்களது பணிப்பதிவேடுகள் முழுமையாக டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே உள்ள புத்தக வடிவிலான 
பணிப்பதிவேடுகள் டிஜிட்டல் வடிவில் மாற்ற ஸ்கேன் செய்து முடிக்கப்பட்டது.
ஒருங்கிணைக்கும் திட்டம் தற்போது கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவுகள் ஏதேனும் இருப்பின் அதனை உள்ளீடு செய்து டிஜிட்டல் பணிப்பதிவேடுகள் முழுமையாகப் பூர்த்தி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால் e-SR சர்வரில் (http://125.23.34.1/esr/) பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகளில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை சரி செய்துகொள்ள இது ஒருவாய்ப்பாக அமையும். மேலும், புத்தக வடிவில் உள்ள பணிப்பதிவேட்டில் இதுவரை உள்ள பதிவுகளை விடுபடாமல் மேற்கொள்ளுமாறும், அதே சமயம் e-SRலும் பதிவுகளை பதிவேற்றம் செய்யுமாறும் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது கருவூலம் மற்றும் கணக்குத்துறை மூலம் 
மனிதவளத்தையும் நிதி மேலாண்மையையும் ஒருங்கிணைக்கும் ஒரு திட்டமாகும். ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திருச்சியில் முழுமையாக இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து அரசு அலுவலகங்களும் தொடர்புடைய கருவூலங்கள் மூலம் உடனுக்குடன் நிகழ்நேர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு கருவூலம் மற்றும் கணக்குத்துறை மூலம் அதன் நிதிசார் ஒழுங்காற்று முறைமையை 
சீர்படுத்த எடுக்கும் அனைத்து நடவடிக்கைளுக்கும் திருச்சிராப்பள்ளியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF