திருச்சியில் 256 நபர்கள் பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் 256 நபர்கள் பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (17.02.2024) பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (17.02.2024) காஜாமலை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற 891 ஆண்கள், 720 பெண்கள் மற்றும் 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1617 நபர்கள் கலந்து கொண்டனர். 108 தனியார்துறை நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர்களால் (ர்சு ஆயயெபநச) நேர்காணல் நடத்தப்பட்டது. எம்.ஆர்.எப், டி.வி.எஸ், யமஹா, ரானே ஆகிய முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்துகொண்டு 256 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் 328 வேலை நாடுநர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் இலவச திறன் பயிற்சிக்கு 14 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில், துணை இயக்குநர் (பொ) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் எஸ்.ரமேஷ்குமார், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, தனியார் துறை நிறுவனங்களின் நிருவாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision