திருச்சி அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்

திருச்சி அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்

திருச்சி மகாத்மா நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு அவசர வார்டு பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு எலும்பு பிரிவு கண் நோய் பிரிவு தீப்புண் உள்பட 16 வார்டுகள் உள்ளன. மேலும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 16 நோய்களுக்கான வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் இதய அறுவை சிகிச்சை, கிட்னி அறுவை சிகிச்சை, குடல் நோய்க்கான அறுவை சிகிச்சை, ஆர்த்தோ அறுவை சிகிச்சை ஆகியவும் துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுநீரக பாதிப்பு டயாலிஸிஸ் நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

தற்போது மழை காலத்தால் நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் எஃப் எம் இரண்டாவது வார்டில் 30 படுக்கைகளுடன் கூடிய டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முற்றிலும் அனைத்து படுகைகளிலும் கொசு வலை கட்டி தயாராக தயாராக வைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn