திருச்சியில் விபத்து வழக்கை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் பலி

திருச்சியில் விபத்து வழக்கை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் பலி

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (52). இவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு காவல்காரன்பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கி வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய மூளை சாலையில் சிதறி கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் கதறி அழுதனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision