கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி அரசு மருத்துவமனை செவிலியர்களுடன் கேக்வெட்டி கொண்டாட்டம்

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி  அரசு மருத்துவமனை செவிலியர்களுடன்  கேக்வெட்டி கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினவிழா கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி நோய்தொற்று குறைய பாடுபட்ட அரசு மருத்துவமனை செவிலியர்கள் கேக்வெட்டி கொண்டாடினார்கள்.மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் செவிலியர்கள் கிளப் சார்பில் தமிழ்நாடு செவிலியர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் ஜெயபாரதி தலைமையில் இன்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில் கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட்டு நோயாளிகளை குணப்படுத்துவதில் மட்டுமன்றி, தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் தங்களது செவிலிய பணியினை சிறப்புடன் மேற்கொண்டு கொரோனாவை வென்றெடுத்த செவிலியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் கேக்வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்ததுடன், ரோஜா பூவினை கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து தங்களது செவிலிய பணியை சிறப்புடன் மேற்கொண்டு, கொரோனா நோயை முற்றிலும் ஒழிக்க முயல்வோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I