திருச்சியில் தனியார் பேருந்து மோதி +2 மாணவி பலி
திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகள் ஜெகஜோதி (17) திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜெகஜோதியை பள்ளிக்கு அவரது அண்ணன் விஜயகுமார் (22) இருசக்கர வாகனத்தில் அழைந்து சென்றார். அப்போது சிந்தாமணி பஜார் பகுதியில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் அண்ணன் தங்கை இருவருமே இருசக்கர வாகனத்தை கீழ விழுந்தனர். அப்போது ஜெகஜோதி மீது பேருந்து சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த மாணவியை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மாணவியை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் விஜயகுமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கோட்டை காவல் ஆய்வாளர் சிவராமன் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியனூர் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், எனவே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி சேர்ந்த மக்கள் மறியல் போராட்டம் நடத்தனர். இதனையடுத்து அங்கு வந்த திருச்சி வடக்கு பிரிவு காவல்துறை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுறுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision