திருச்சி மாவட்டத்தில் நான்கு கோடி பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் நான்கு கோடி பறிமுதல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை தடுப்பதற்காக வருமானவரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தில் நான்கு கோடி பறிமுதல் 

கடந்த ஆறாம் தேதியிலிருந்து(06.04.2024,07.04.2024) திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ 2 கோடி ரூபாய் 2 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில்(07.04.2024) திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ரூ ஒரு கோடியே 29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் வந்ததிலிருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் ரூ 4 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரத்து 445 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டப்பட்டது ரூ ஒரு கோடியே 54,27,265 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தத் தொகை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்படை உள்ளிட்ட மூன்று குழுவினரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision