திருச்சியில் 5 நிமிடத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா

திருச்சியில் 5 நிமிடத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் 1084 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்கள், புதிய திட்ட பணிகள் மற்றும் நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள பஞ்சப்பூர் இடத்தை பார்வையிட்டார்.

திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் பகுதியில் 832 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.

முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி வரைப்படத்தையும் பார்வையிட்டார். இதில் பஞ்சப்பூரில் ரூ.140 கோடியில் பேருந்து முனையம், ரூ.76 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம், ரூ.75 கோடியில் சாலைகள், மழைநீர் வடிகால், இதர கட்டமைப்பு வசதிகள், ரூ.59 கோடியில் பல்வகை பயன்பாடு மற்றும் இதர வசதிகளுக்கான மையம் என 350 கோடி திட்ட மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பின்னர் அங்கு கல்வெட்டை திறந்து வைத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விமான நிலையம் சென்று விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn