மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணர்வு திருவிழா - கண்காட்சி

மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணர்வு திருவிழா - கண்காட்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சத்துணவு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறு தாவிய உணவு விழிப்புணர்வு திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிப் குமார் இன்று (10.10.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், சிறப்பாக சிறுதானிய உணவு தயாரித்த பள்ளி சத்துணவு பணியளார்கள் குழுக்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஐக்கிய நாடுகள் பொது சபை தீர்மானமானது சுகாதார நலன்கள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தை ஏற்றுக் கொண்டு 2023 ஆம் ஆண்டை "சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தின்படி சிறுதானியங்கள் எளிதில் ஜீரணம் ஆகுவதற்கும் பசியை தூண்டுவதற்கும் மற்றும் அமைதியான தூக்கம் உண்டாவதற்கும் உதவுகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் 2024 ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டத்தின் மூலமாக மாவட்ட அளவிலான பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ள இந்திய அரசு கல்வித்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பள்ளி மாணவ மாணவியர்களுக்கான வினாடி வினா போட்டி, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம், சிறுதானிய சமையல் போட்டி, சிறுதானிய கண்காட்சி நடைபெற அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களிடையே சிறுதானியங்கள் குறித்து வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து, பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் சிறுதானிய சமையல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார்.

மேலும், சிறுதானியங்களின் அவசியம் குறித்தான புகைப்படங்கள், பேனர்கள், உணவு வகைகள், மூலப்பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் காணும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள் பிரதான நுழைவு பகுதியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியர்கள், சத்துணவு பணியாளர்கள், தன்னார்வலர்களை கொண்டு மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணர்வு மஊர்வலம் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகையுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான் கவியரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரா.ரேவதி, சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision