போதை பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

போதை பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கைது செய்யவும், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கடந்த 07.10.22-ந்தேதி எடமலைபட்டிபுதூர் எல்லைக்குட்பட்ட மில்காலனி மாரியம்மன் கோயில் அருகில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக எதிரி அலர்ட் ஆறுமுகம் @ ஆறுமுகம் என்பவரை கைது செய்தும், அவர்களிமிருந்து சுமார் 1400கிராம் (மதிப்பு சுமார் ரூ.14,000/-) கஞ்சாவை கைப்பற்றி எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி மீது திருச்சி மாவட்டத்தில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக 4 வழக்குகள் உட்பட மொத்தம் 5 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவருகிறது.

மேற்படி எதிரி அலர்ட் ஆறுமுகம் @ ஆறுமுகம் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் எனவும், இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எடமலைபட்டிபுதூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு (மருந்து சரக்கு குற்றவாளி) சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்து எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO