சாலையில் எரிக்கப்படும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை

சாலையில் எரிக்கப்படும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை

கலைக்காவிரி கல்லூரி, கன்டோன்மென்ட் பகுதி பென்வெல்ஸ் சாலைக்குப் பின்புறம் உள்ள சாலையில் கல்லூரியின் விடுதி பின்புறம் தொடர்ந்து சாலையிலேயே குப்பைகளைக் கொட்டி விடுகின்றனர். சமூக விஷமிகள் தீயிட்டுவிடுவதால் தொடர்ந்து எரிந்துக்கொண்டு நச்சுப் புகையை கக்குகிறது. மின்வயர்கள் கேபிள் கம்பிகள் உள்ளது.

ஏற்கனவே இது போல் எரித்து விட்டு மின்வயர் எரிந்து அறுந்து விழுந்து விடுதியில் மின்வெட்டுகள் ஏற்பட்டது. எனவே மாநகராட்சி அலுவலர்கள் உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO