திருச்சி தென்னூர் 28வது வார்டில் அவலம்

திருச்சி 28வது வார்டுக்குட்பட்ட தென்னூர் காமராஜ் நகரில் போடப்பட்ட சிமெண்ட் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதேபோல் காமராஜ் நகரில் அடிபம்ப் ஒன்றும் பல நாட்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மேலும் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடியானது பல நாட்களுக்கு முன்பு உடைந்து இன்னும் திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் அவ்வப்போது பாதசாரிகள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் தென்னூர் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தாலும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் வெள்ளாளர் தெருவிலும் கழிவுநீர் தொட்டியின் மூலம் சரியாக அமைக்கப்படாததால் பாதசாரிகள் விழுந்து சிறு சிறு விபத்துக்கள் அவ்வப்போது ஏற்படுகிறது.
மேலும் காவல்காரர் தெருவில் உள்ள அடிபம்ப் -ல் குடம் வைத்து பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளது மற்றும் தெருவின் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாதசாரிகளும்,வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே மேற்கண்ட பகுதிகளில் பல நாட்களாக உள்ள பிரச்னைகளை சரிசெய்து கொடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision