பாதாளச்சாக்கடை அடைப்பு - 8 வருடங்களாக புகார் போராட்டம்

பாதாளச்சாக்கடை அடைப்பு - 8 வருடங்களாக புகார் போராட்டம்

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 52, வருசை மஹால் சந்தில் சுமார் 7 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 50 நபர்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பாதாளச் சாக்கடையில் எந்தவித அடைப்பும் ஏற்பட்டது இல்லை. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியின் பின்புறத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு கட்டப்பட்டுள்ளது. அதில் சுமார் 15 குடியிருப்புகள் உள்ளது. அதில் வசிப்போர் சுமார் 50 நபர்களுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பு பாதாளச் சாக்கடையின் இணைப்பு, எங்கள் பாதாளச் சாக்கடையின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு கொடுத்த நாட்களிலிருந்து 2 மாதங்களுக்கு ஒவ்வொரு முறையும் பாதாளச் சாக்கடை தொட்டி நிரம்பி எங்களுடைய பகுதியின் நிலத்தில் விழுந்து, எங்கள் வீட்டின் உட்புறத்திலும் கழிவுநீர் வந்து விடுகிறது. நிலத்தடி போரிலும் இறங்கி குடிநீரை உபயோகப்படுத்த முடியவில்லை. வீட்டின் முன்னும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி குழந்தைகள், மற்றும் பெரியோர்களின் சுகாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது.

 மேலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாதாளச் சாக்கடை நிரம்புவதால் அதனை சரி செய்வதற்கு மாநகராட்சியில் வேலை ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் செலுத்தி அதனை சுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது சம்பந்தமாக கடந்த 8 வருடங்களாக நாங்கள் புகார் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தயவு கூர்ந்து எங்களுடைய மனுவை பெற்றுக் எங்களுடைய கஷ்டங்களை புரிந்து கொண்டு உரிய தீர்வை ஏற்ப தரும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி 52 வது வார்டு கவுன்சிலர் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி மேயர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தொடர்ந்து இப்போது மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision