துரித நடவடிக்கை எடுத்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட அமைச்சர் மற்றும் ஆட்சியர் - மக்கள் பாராட்டு

துரித நடவடிக்கை எடுத்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட அமைச்சர் மற்றும் ஆட்சியர் - மக்கள் பாராட்டு

திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்சி மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. 

இந்நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு அண்ணா நகர் பேஸ் 1 குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனை அறிந்த அச்சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அப்பிரசனையை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார். 

அமைச்சரின் அறிவுறுத்தலின் படி உடனடியாக அவ்விடத்தை பார்வையிட்ட ஆட்சியர் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். 

மக்களின் கோரிக்கைக்கு தீர்வு காண முயற்சி எடுத்த அமைச்சரையும ஆட்சியரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn