படையெடுக்கும் பாம்புகள்- 44 வது வார்டு மக்கள் அச்சம்

Mar 23, 2023 - 01:20
Mar 23, 2023 - 01:31
 1792
படையெடுக்கும் பாம்புகள்- 44 வது வார்டு மக்கள் அச்சம்

திருச்சி  வார்டு 44 A தங்கேஸ்வரி நகர் நாலாவது  தெருவில் சுமார் ஒ 150 பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இத்தெருவில் ஒரு பழைய வீடு ஒன்று உள்ளது பல வருடங்களாக பூட்டி பழுதடைந்து உள்ளது.

இந்த வீட்டில் அதிகப்படியான விஷவாய்ந்த பாம்புகள் நிறையாக சுற்றுகின்றன அவ்வப்போது இந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் இரவு நேரத்திலும் பகல் நேரத்திலும் பாம்புகள் வெயில் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் வருகின்றன.

இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும்  அச்சத்தில் உள்ளனர். வெயில் காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் அடிக்கடி வீட்டிற்குள் நுழையும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் எனவே மாநகராட்சி அவ்வீட்டு பகுதிகளை பகுதியை சுத்தம்  செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்றும்  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn