திருச்சியில் உற்சாக நடனமாடிய பெண் காவலர்கள்

திருச்சியில் உற்சாக நடனமாடிய பெண் காவலர்கள்

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சைக்கிள் பேரணியானது நேற்று மாலை திருச்சி முதல் பட்டாலியன் வளாகத்திற்கு வந்து சேர்ந்தது. 

அவர்களுக்கு பட்டாலியன் கமாண்டன்ட் ஆனந்தன் தலைமையில் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் மொத்தம் 110 பெண் காவலர்கள் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். பெரம்பலூரில் இருந்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை திருச்சியில் இருந்து புறப்பட்டு முதலாம் பட்டாலியன் கமாண்டன்ட் தலைமையில் துவரங்குறிச்சி வரை அவர்களை அழைத்துச் சென்னர்.

முன்னதாக நேற்று இரவு பட்டாலியனுக்கு வந்து சேர்ந்த  திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா, காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், துணை ஆணையர் ஸ்ரீ தேவி உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து தங்களுடைய வாழ்த்துக்களை கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா ஒரு வகையில் பெண் காவலர்கள் மிகுந்த பொறுப்புடனும், கவனத்துடனும் பணியாற்ற வேண்டும். காவல் துறையில் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் காவல் நிலைய பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது சைக்கிள் பேரணி கலந்து கொண்ட பெண் காவலர்கள் மிகவும் உற்சாகமுடன் கூட்டமாக நடனமாடி மகிழ்ந்தனர். முன்னதாக அவர்களுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாடல் இசைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுதும் பெண் காவலர்கள் நடனமாடியே வந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn