40 நிமிடத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தோப்புக்கரணம்

40 நிமிடத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தோப்புக்கரணம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வழி நடுநிலைப்பள்ளி 60வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதனை வைர விழாவாக கொண்டாடி வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் 414 பேர் 40 நிமிடத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தோப்புக்கரணம் போடும் உலக சாதன விழாவிற்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவன நிர்வாகி நீலமேகம் நிலவன் தலைமை வைத்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட தொடக்கக்கல்வி இயக்குனர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக சாதனை தோப்புக்கரணம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில்..... தமிழ் மொழி மீது பற்று கொண்டு 60 ஆண்டு காலமாக செயல்படும் இந்த பள்ளியின் செயலை பாராட்டியும், வாழ்த்துவதாகவும், இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 414 பேர் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை செய்துள்ளார்கள். முன்பெல்லாம் தோப்புக்கரணம் தண்டனைக்காக போடப்பட்டது இப்பொழுது உலக சாதனைக்காக போடப்படுகிறது.

குழந்தைகள் மனிதனாக உருபெற்று மனிதனாக வாழ மனிதாபிமானம் தேவை அந்த மனிதாபிமானத்திற்கு அடிப்படைதாய்மொழி அது தமிழ் மொழியில் அதிகமாக உள்ளது. ஆங்கிலத்தில் பேசும்போது நான் ஏதோ கருத்து சொல்ல வருகிறோம் என்பது தான் தெரியும். ஆனால் தமிழில் உரையாற்றும் பொழுது தான் இதயபூர்வமாக பேசுவது புரியும் மொழி மூளையின் ஒரு பகுதி உடலின் உறுப்பு என கூறுவார்கள் தமிழக முதல்வர் தமிழ் மொழியை பாதுகாக்கிறார். பள்ளி கல்வித்துறை அதனை செய்கிறது, ஆனால் மாணவர்களிடம் தமிழ்மொழியின் பெருமையை எடுத்துச் சொல்வது ஆசிரியர் கையில் உள்ளது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது என்றார். பின்னர் பள்ளியின் வைர விழா மலரை வெளியிட்டதோடு தமிழ் காப்பக விருதை பள்ளிக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மூலம் வழங்கினார். முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பள்ளி சிறுவர்கள் கலைஞர், திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், சுப்பிரமணி ஐயர் ஆகியோர் வேடம் அணிந்து வரவேற்றனர்.

இந்த விழாவில் திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரெஜினா பெஞ்சமின் , ஜெஹரா பர்வின், கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பெல் தொமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் கணேஷ் குமார், சோழன் உலக சாதனைப் புத்தக தலைமைச் செயற்குழுவின் பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision