திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல். ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல். ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், நேற்று 18.07.2021 சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளை DRI (Director of Revenue Inteligence) மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு, தூத்துக்குடி துணை இயக்குனர் பாலாஜி தலைமையில் 12 நபர்கள் கொண்ட தனிப்படையினர் சோதனை செய்தனர்.

திருச்சி விமானநிலையத்திற்கு வெளியில்  கடத்தல் தங்கத்தை பெற்றுக்கொள்ள வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூன்று நபர்களை பிடித்துக்கொண்டு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று, விமானத்தில் வந்து இறங்கிய சந்தேகத்துக்கிடமான, விஜய், மணிகண்டன், செல்வகுமார், கோபி ஆகிய 4 நபர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 3 கிலோ 400 கிராம் தங்கம் கைபற்றப்பட்டது.

இதன் மதிப்பு ஒரு கோடியே 60 லட்சம் ஆகும். மேலும் இந்த தங்கம் கடத்தி வந்த பயணிகளின் புகைப்படம் சுங்கத்துறை ஆய்வாளர் செல்போனில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவியாக இருந்த சுங்கத்துறை ஆய்வாளர் தர்மேந்திரா ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் மொத்தம் 8 நபர்களையும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்கதையாகி வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH