சாவகாசமாக சாலை கடந்து சென்ற மலைப்பாம்பு - வழிவிட்ட வாகன ஓட்டிகள்.

சாவகாசமாக சாலை கடந்து சென்ற மலைப்பாம்பு - வழிவிட்ட வாகன ஓட்டிகள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளான‌ பன்னப்பட்டி, கருமலை, நடுப்பட்டி, கண்ணூத்து, கல்பட்டி, துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மலைகள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் மலைப்பகுதி வாழ்விடமாகக் கொண்ட மான், காட்டெருமை, மலைப்பாம்பு போன்றவை அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இன்று இரவு மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மணியங்குறிச்சி பிரிவு சாலை அருகே அலங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து வந்த மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றது. சாலையின் குறுக்கே வந்த பாம்பை பார்த்து வாகன ஓட்டிகள் தங்களது வண்டிகளை நிறுத்தினர்.

ஆனால் பாம்பு சாவகாசமாக சாலையை கடந்து சென்றது. பாம்பு சாலையை கடந்து சென்ற பின்னரே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எடுத்துச் சென்றனர். பாம்பு ஊர்ந்து செல்வதை சாலையில் சென்றவர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்துச் சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision