ஊராட்சி மன்றத் தலைவி தப்பிக்க உண்ணாவிரத நாடகம் என புகார்!
அந்தநல்லூர் ஒன்றியம் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கிருத்திகா அருண்குமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விளையாட்டுத் திடல் சரி செய்யாமல் ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்துள்ளதாகவும், அதுமட்டுமன்றி 8வது வார்டில் சிமெண்ட் சாலை, வடிகால் முழுமையாக தூர் வாராமல் பணம் எடுப்பதற்கு மட்டும் ஆதாரம் வழங்கியும், பணத்தை கொடுப்பது தொடர்பான வீடியோ ஆடியோ ஆதாரங்களை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்குமாறு எட்டாவது வார்டு உறுப்பினர் செந்தில் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
Advertisement
மேலும் இது குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவி கிருத்திகா அருண்குமார் நம் மீது நடவடிக்கை பாய்ந்து விடுமோ என்ற பயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ....தரக்குறைவாக நடத்துவதுடன் அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதாகவும், வார்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து அவதூறு பரப்பியும், பெயருக்கு தலைவராக அமர வைத்து பணி செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்து நிர்ப்பந்திப்பதை கண்டித்தும், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எட்டாவது வார்டு உறுப்பினர் செந்தில்குமார், துணைத் தலைவர் மணிமேகலை லட்சுமணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
ஆடியோ வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாட்டிக் கொள்ளும் நேரத்தில் தலித் என்ற பெயரில் தப்பி பார்க்க திட்டம் போட்டு உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதியில் சிலர்!