ஸ்ரீரங்கத்தில் 40 ஆண்டுகளாக பராமரிப்பில்லாத தீர்த்த குளத்தை சீரமைத்த கோவில் நிர்வாகம் - பக்தர்கள் பொதுமக்கள் பாராட்டு!!

ஸ்ரீரங்கத்தில் 40 ஆண்டுகளாக பராமரிப்பில்லாத தீர்த்த குளத்தை சீரமைத்த கோவில் நிர்வாகம் - பக்தர்கள் பொதுமக்கள் பாராட்டு!!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிவர்

Advertisement

இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நவ தீர்த்த குளங்களில் ஒன்றான பில்வ தீர்த்த குளம் சுமார் 40 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்தது.இதனைக் கருத்தில் கொண்ட ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் இதனை மிக விரைவாக சீரமைத்து வருகின்ற 27ஆம் தேதி பங்குனி திருவிழா அன்று ஸ்ரீ நம்பெருமாளுக்கு புதிதாக சீரமைக்கப்பட்ட பில்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

சுமார் 40 ஆண்டு காலமாக பராமரிப்பில்லாத தீர்த்த குளத்தை சீரமைத்த கோவில் நிர்வாகத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisement