திருச்சி அருகே தவறுதலாக ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை பரிதாப பலி!

திருச்சி அருகே தவறுதலாக ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை பரிதாப பலி!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காமாட்சிபட்டியில் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஜூஸ் என நினைத்து குடித்த குழந்தை பரிதாபமாக இறந்து போனார்.

Advertisement

முசிறி தாலுகா காமாட்சி பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா.இருவருக்கும் ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது.கடந்த 3ஆம் தேதி மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஜீவா வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கான வைத்திருந்த மண்ணெண்ணையை ஜூஸ் என நினைத்து தவறுதலாக குடித்துள்ளார்.

Advertisement

இதனைக் கண்டு பதறிய தாய் சுகன்யா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக தண்டலை புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.