திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த 40 இலட்சம் தங்க நகைகள் - அதிகாரிகள் ஆய்வு

திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த 40 இலட்சம் தங்க நகைகள் - அதிகாரிகள் ஆய்வு

Advertisement

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் பலர் திருச்சி விமானநிலையத்திற்கு காலை மற்றும் மாலை வேளைகளில் வருவதால் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விமான நிலைய இமிகிரேஷன் அருகில் உள்ள கழிவறையில் விமான நிலைய ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு 40 லட்சம் மதிப்புள்ள 840 கிராதங்க நகைகள் கிடந்துள்ளது.

Advertisement

கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளார். உடனே அங்கு வந்த அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த மர்ம நபர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து கடத்தல் தங்கத்தை கழிவறையில் விட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.