காவல் துறையின் உதவி எண்களை பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவு
பேரிடர் காலமான இந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு நேரடியாக சென்று கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்பு இணையவழி மூலம் முதல் பெரும்பாலான பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் ஒரு சிலர் தகாத முறையில் பாலியல் தொந்தரவுகளை தரும் வகையிலும் இளம் பள்ளி மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்கள் மத்திய மண்டலத்தில் நடைபெறா வண்ணம் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாலியல் ரீதியான தொந்தரவுகளை போக்கும் வகையில் ஆன்-லைன் மூலமாக பாடங்களை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் உடன் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கி வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள சுமார் 255 பள்ளிகளில் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இணைய வழி மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் ஆணையின்படி பள்ளிகளில் நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் முழுவதும் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவது பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்ந்த இரு நபர்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் இந்தப் பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதாக அளித்திடும் வகையில் காவல் துறையின் உதவி எண்கள் பள்ளி நிர்வாகத்தினர் மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போஸ்கோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ - மாணவிகள் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி ஆன்லைன் வகுப்புகள் பயில்வது உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆன்லைன் மூலம் பயிலும் மாணவ மாணவியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve