அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள்அவதி - நோய்த்தொற்று பரவும் அபாயம்

அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள்அவதி - நோய்த்தொற்று பரவும் அபாயம்

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் வளாகத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. நோய்த்தொற்று ஏற்படும் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு பொதுமக்கள் வந்து செல்லும் சூழலில் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சூழல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியில் கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சுத்தம் செய்கின்றரே தவிர, இதனை சரி செய்வதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக திருச்சியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற சுகாதாரமற்ற சூழல் அரசு மருத்துவமனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மாநகராட்சி உடனடியாக அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்   கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn