டெல்லியில் அரை நிர்வாண போராட்டம் நடத்த தயாரான அய்யாக்கண்ணு - வீட்டு சிறை வைத்த காவல்துறையினர்!

டெல்லியில் அரை நிர்வாண போராட்டம் நடத்த தயாரான அய்யாக்கண்ணு - வீட்டு சிறை வைத்த காவல்துறையினர்!

தென்னிந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வருகின்ற 26, 27ம் தேதி டெல்லியில் அரைநிர்வாண போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இவருடன் சுமார் 500 விவசாயிகள் இன்று ரயில் பயணத்திற்காக புறப்பட தயாரானர்.

Advertisement

இந்நிலையில் திருச்சி அண்ணா நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டிற்கு ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சென்று அய்யாகண்ணுவை வீட்டிலேயே முடக்கினர்.

இதனால் டெல்லி பயணம் ரத்தானதால் விவசாயிகள் அய்யாக்கண்ணு வீட்டிற்கு அருகில் அரை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்பு கரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் தொடர்ந்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm