திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி

திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பலத்த சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயழலிப்பு நிபுணர்கள் அது பொய்யானது என்பது உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில்..... உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும். இது வெறும் மிரட்டல் அல்ல நாளை மாலை நிச்சயம் குண்டு வெடிக்கும். இரண்டு பள்ளிகளிலும் நாளை மாலை வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு நம்பர்கள் விரைந்து வந்து பள்ளி முழுவதும் சோதனை நடத்தி அது புரளி என உறுதி செய்தனர். கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் யார் இதை அனுப்புகிறார்கள் என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜன் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும்,

சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனைக்கு பின்னர் மீண்டும் இது ஒரு பொய்யான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபரை தேடும் பணியில் சைபர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision