தொழில்முனைவோராக மாற்றிய கலை - ஓவியங்களை தத்ரூபமாக வரையும் மங்களம் ஸ்ரீனிவாசன்!!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது அவர்களின் வீடு, வீட்டுக்குள் நுழையும்போதே நம்மை வரவேற்கிறது அவரின் கைவண்ணத்தில் உருவான தஞ்சாவூர் ஓவியங்கள். கண்ணில் உயிர்ப்புடன் நம்மை வேறு எதிலும் கவனத்தை திருப்பிவிடாதவறு இருக்கும் ஓவியங்களுடன், கையில் பெயிண்ட் பிரஷ் கொண்டு வரைந்து கொண்டிருந்தார் மங்களம் ஸ்ரீனிவாசன் (60).
இதுக்குறித்து அவர் கூறுகையில்...... ஓடியாடி விளையாடும் பால்ய வயதில் என்னுடைய உறவினர் ஒருவர் போட்ட கோலம் என்னை ஈர்க்க, நிறைய ரங்கோலி கோலங்கள் போட ஆரம்பித்தேன். கோலம் தான் என்னுடைய அடையாளமாக இருந்தது. ஆனால் என்னுடைய குடும்பமே கலை சார்ந்து இருந்ததால் எனக்கும் ஓவியங்கள் மேல் ஆர்வத்தை கொண்டுவந்தது.
அதன்பின் என்னுடைய 48வது வயதில் என்னுடைய கணவர் கூறி தமிழ்நாடு அரசின் ஒரு வருட ஓவிய பயிற்சியில் கலந்துகொண்டேன். அதன்பின் தஞ்சாவூர் ஓவியங்களின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கோலமும், ஓவியமும் தான் எனக்கு எல்லாமுமாக மாறியது. கோலத்திற்காக தினமும் 8-10 மணிநேரம் கூட நேரத்தை செலவிடுவேன். தற்போது ஓவியங்களுக்காகவும் என்கிறார்.
மனக்கண்ணில் நினைக்கும் முகம் ஓவியத்தில் வந்துவிட்டால் அது முழுவதுமாக முடிந்து எடுத்து வைக்கும் வரை சொர்க்கத்தில் இருப்பது போன்றே உணருவேன், இப்படி கலைக்குள் என்னை நான் அப்போது கூட தெரியாது இந்த கலை என்னை தொழில்முனைவோராக மாற்றும் என்று, என்னுடைய மகள் தான் என் படைப்புக்களை சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்கிற்காக பதிவிட ஆரம்பித்தார்.
10 வருடங்களுக்கு முன்பு என்னுடைய 50வது வயதில் தான் என்னுடைய கலைகள் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இதுவரை உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு என்னுடைய ஓவியங்கள் சென்று சேர்ந்துள்ளது, திருப்பதி பிரமோற்ஸவ விழாவில் 2019ஆம் வருடத்தில் இருந்து என்னுடைய கோலம் பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்கிறார்,.
தொடர்ந்து பலருக்கும் தஞ்சாவூர் ஓவிய கலையை பற்றி வகுப்பெடுத்தும் வருகிறார். இதற்காக பாரதிதாசன் பல்கலைகழகத்தின் முன்னோடி பெண்மணி விருதையும், தமிழக அரசின் பூம்புகார் மாவட்ட விருதையும் பெற்றுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision