ஒன்பது வருடங்களுக்கு பிறகு சூரிய கிரகணம்: திருச்சியில் காண சிறப்பு ஏற்பாடு:

ஒன்பது வருடங்களுக்கு பிறகு சூரிய கிரகணம்: திருச்சியில் காண சிறப்பு ஏற்பாடு:

திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கத்தில், டிசம்பா் 26- ம் தேதி கங்கண சூரிய கிரகணத்தை தொலைநோக்கி மூலம் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரு சேர நேர்க் கோட்டில் வரும் நிகழ்வே கிரகணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதன்படி அவ்வப்போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை நிகழ்கின்றன.சூரியனைப் புவி சுற்றிவரும் பாதையுள்ள தளமும், நிலவு புவியைச் சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றி வரும் பாதை புவி-சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழுவு நிலவு நாளோ ஏற்பட்டால் சூரிய கிரகணமும், சந்திரகிரகணமும் நிகழும்.

நிலவு புவியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. இதனால், புவிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு 3,57,200 கி.மீ. முதல் 4 ,07,100 கி.மீ. வரை மாறுபடுகிறது. வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது, அதன் தோற்ற அளவு, சூரியனின் தோற்ற அளவை விட சற்று சிறிதாக இருக்கும்.

Advertisement

எனவே, அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க முடியாது. ஒரு கங்கணம் (வளையம்) போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளியே தெரியும். எனவே, இதனை கங்கண சூரிய கிரகணம் என்கிறோம்.இத்தகைய கங்கண சூரியகிரகணம் வரும் டிசம்பா் 26-ம் தேதி நிகழவுள்ளது. இதன்பிறகு இந்தியாவில் மீண்டும் 2020, ஜூன் 21-ஆம்தேதி ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட் மாநிலங்களில் இந்த கங்கண சூரிய கிரகணத்தை காணலாம்.

தமிழகத்தில் மீண்டும் 2031, மே 21-ஆம் தேதிதான் காண முடியும்.டிசம்பா் 26-ஆம் தேதி நிகழவுள்ள சூரிய கிரகணமானது சவூதி அரேபியாவில் தொடங்கி கத்தாா் நாடு, ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, இலங்கை, சுமத்ரா, மலேசியா, மாலத்தீவு, இந்தோனேசியா, சிங்கப்பூா் பகுதிகளில் தெரியும்.திருச்சியில் காலை 8.07 மணிக்கு தொடங்கி முற்பகல் 11.16 மணி வரை நடைபெறும். திருச்சியில் 95 சதவிகிதம் வரை சூரியனை சந்திரன் மறைத்துச் செல்லும். அதிபட்ச கிரகணம் காலை 9.32 மணிக்கு நிகழும். அப்போது, சூரியனை வெறும் கண்களால் பாா்க்கக் கூடாது. கங்கண கிரகணத்தின்போதும் பாா்க்கக் கூடாது.

இந்த வானவியல் நிகழ்வை காண பொதுமக்கள் வசதிக்காக, அண்ணா அறிவியல் மையத்தில் திரை அமைத்து, சூரிய பிம்பத்தை திரையில் விழச் செய்து காணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது தொலைநோக்கி மூலம் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சூரிய ஒளி வடிகட்டித்தகடுகள், கண்ணாடிகள் அமைக்கப்படவுள்ளன நம் திருச்சியில்.

திருச்சியின் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் வாட்ஸ்அப் குழுவில் மூலம் வந்தடைய கீழ்காணும் TRICHY VISION குழுவில் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மேலும் நீங்கள் பார்க்கும் நிகழ்வுகள், செய்திகள் , உங்கள் பகுதியின் செய்திகள்,கட்டுரைகள்,தனிதிறமைகள்,வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களிடம் அனுப்புங்கள் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்.
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5