இல்லம் தேடி வரும் இட்லி - ஆரோக்யத்திற்கான புதிய சேவையில் MPR FOODS

இல்லம் தேடி வரும் இட்லி - ஆரோக்யத்திற்கான புதிய சேவையில் MPR FOODS

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் சிறுதானியங்களில் தின்பண்டங்கள், இயற்கை பொருட்களை சாப்பிட வைக்க வேண்டும் என பசுமஞ்சளில் உணவு பொருட்கள் தயாரிப்பு என 2016 ஆம் ஆண்டு முதல் MPR FOODS தயாரிக்கும் ஒவ்வொரு உணவும் மக்கள் ஆரோக்கியத்தை சார்ந்தே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வீட்டு விசேங்களுக்கும், அலுவலுகங்களுக்கும் தேவையான இட்லிகளை, தேவையான இடத்திற்கே வந்து டெலிவரி கொடுக்கும் வகையில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர் MPR FOODS. இட்லியை முன்னிலைப்படுத்தியது ஏன் என்ற கேள்வியுடன் MPR FOODS நிறுவனர் Dr.பார்கவி ராஜாவிடம் பேசினோம்.

‘தமிழ்நாட்டை பொறுத்தவரை இட்லி என்பது ரொம்ப முக்கியமான ஒரு உணவு. ஒரு வயது குழந்தையில் ஆரம்பித்து வயதானவர்கள் வரை அனைவரும் எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட கூடியது ஆகும். ஆனால் தற்போதைய காலசூழலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் வீட்டில் இட்லி சுடுவது என்பது கொஞ்சம் வேலை பளு அதிகமாகவே இருக்கும். 

அப்போ தேவையானவர்களுக்கு எளிதாக இட்லி கிடைக்க வேண்டும், விலையும் குறைவாக இருக்க வேண்டும், கூடவே ஆரோக்கியமாக, சுத்தமாக இருக்க வேண்டும் என எண்ணினோம். அதனால் இட்லிக்கு மட்டும் என தனியாக ஒரு பேக்டரி தயார் பண்ணிருக்கோம். ஆரம்பத்தில் எங்களுடைய இந்த திட்டத்திற்கு அன்னபூரணி என பெயரிட்டு ரோட்டரி கிளப்புடன் இணைந்து தேவையிருக்கும் மக்களுக்கு ( அரசு மருத்துவமனை, சாலையோரங்களில் இருப்பர்களுக்கு) வாரத்தில் ஒருநாள் இலவசமாக கொடுத்துவந்தோம். இப்போதுவரை அதை செய்து வருகிறோம். 

அதனடிப்படையிலேயே தற்போது வீட்டு விசேஷங்களுக்கு டோர் டெலிவரி கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம்‘ என்றார். ஆரம்பத்தில் இவர்களின் MPR FOODS நிறுவனம் இட்லி தோசைக்கான மாவுடன் தான் தொடங்கியது. தொடர்ந்து வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் சிறுதானிய தின்பண்டங்கள் விற்பனை ஆரம்பமானது. 

தற்போது திருச்சியின் பல்வேறு கல்லூரிகளுக்கு இவர்களின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision