புயல் நிவாரண பணியில் திருச்சி மதுரம் மருத்துவமனை!
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நிவர் புயல் காரணமாக கடலூர், காரைக்கால், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர்.
Advertisement
இந்நிலையில் திருச்சி மதுரம் மருத்துவமனை சார்பாக கடலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய தொலைதூர பின்தங்கிய கிராம மக்கள் நிவர் மற்றும் புரவி புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் அத்தியாவசிய உணவு பொருட்கள் பெட்ஷீட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, மற்றும் 5 கிலோ அரிசி மற்றும் இரண்டு பிரட்டு பாக்கெட்டுகள் வழங்கிட வேண்டி திருச்சி TELC சிற்றாலய பொறுப்பாளர் டேவிட் பரமானந்தம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் மதுரம் மருத்துவமனை திருச்சி நிர்வாக இயக்குநர் ஐவன் மதுரம் மற்றும் அவரது மகன் மாஸ்டர் ஜொகன்னான் எரிக் மதுரம் மற்றும் மதுரம் சுகாதார கல்வி சேவா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் உதவியோடு கடலூர் மாவட்டத்திற்கு சென்று மேற்படி உதவிகள் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு நேரிடையாக வழங்கப்பட்டது.
Advertisement
மேலும் சுமார் 200 குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. சுமார் 3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவினர். கடந்த 8 மாதங்களாக கொரோனா காலகட்டத்திலும் சரி, தற்போது இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரி கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி உதவும் மதுரம் மருத்துவமனை என்றுமே கிரேட் தான்!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO