ஹோம் மேக்கரிலிருந்து தொழில் முனைவோவராக மாறிய கீதா சரவணன்

ஹோம் மேக்கரிலிருந்து தொழில் முனைவோவராக மாறிய கீதா சரவணன்

அழகுக்கலை நிபுணர்களின் அடையாளம் அடுத்த வெர்ஷனுக்குத் தயாராகி வருகிறது. பியூட்டீஷியன் என அழைக்கப்பட்டவர்கள், 'மேக்கப் ஆர்ட்டிஸ்ட்' என அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் இணைகிறார் திருச்சியை சேர்ந்த கீதா சரவணன். பெற்றோரின் விருப்பத்துக்காக பி. காம் முடித்தவர், தன் விருப்பத்துக்காகத் தேர்ந்தெடுத்தது மேக்கப் துறையை.. படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் அதை ஒவ்வொரு நொடியும் ரசித்து செய்கிறார்.

திருமணத்திற்கு பின்பு மேக்கப்துறை குறித்து கல்வி கற்று கடந்த 16 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே வருமானமும் ஈட்டி வருகிறார். புன்னகையோடு நம்மிடம் பேசி தொடங்கினார் கீதா சரவணன். சிறுவயதிலிருந்து கிராஃப்ட் செய்வது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அப்படி கற்றுக் கொண்டதுதான் இந்த பிளவர் மேக்கிங்()Flowers making) நாளடைவில் இதுவும் எனக்கான ஒரு அடையாளமாகவும் மாறிப்போனது பல கல்லூரி மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பிளவர் மேக்கிங் வகுப்புகள் நடத்திவருகிறேன். அடுத்து வேறு ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டது தான் இந்த மேக்கப் கலை நாளடைவில் அதுவும் என்னுடைய மற்றொரு அடையாளமாக மாறிப்போனது.

வாடகை வீட்டிலிருந்த போது ஒரு சிறு அறையை பார்லர் ஆக மாற்றிக் கொண்டேன் அதிலேயே பணி செய்வது , வெளி ஊர்களுக்கு சென்று பிரைடல் மேக்கப் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள சஞ்சீவி நகரில் சொந்த வீடு ஒன்று கட்டிய பின்னர் பார்லருக்காக தனி அறை கட்டியுள்ளோம். என் கணவர் என் மீது வைத்த நம்பிக்கையையும் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பையும் சுதந்திரத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக எனது பெயரை அருகில் இருப்பவர்கள் அறிய தொடங்கினர்.

இன்று பல மாவட்டங்களில் இருந்தும் என்னிடம் பயிற்சி பெற்றுக் கொள்ள மாணவர்கள் வருகின்றனர். மாவட்ட தொழில் மையம் மூலம் திருநங்கைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கும் திறன் பயிற்சி அளித்து வருகிறேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை இன்று தொழில் முனைவராக மாற்றி உள்ளேன். எனது வாழ்வின் மிகப்பெரிய நோக்கமே வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை குடும்ப தலைவியாக மட்டுமல்லாமல் வருமானம் ஈட்டும் தொழில் முனைவோராகவும் வீட்டில் இருந்தபடியே மாற்றிக் கொள்ளலாம் என்பதை இந்த உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதே !! 

இந்த 16 ஆண்டு கால உழைப்பு எனக்கான தனி அங்கீகாரத்தை உருவாக்கி இருக்கிறது பல விருதுகளையும் பெறுவதற்கு உதவி இருக்கிறது .. நம்மிடம் இருக்கும் திறமைகளை குடும்ப பொறுப்பு மற்றும் சூழலால் மறந்துவிடாமல் நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள ஒவ்வொரு பெண்களும் முன் வர வேண்டும் என்கிறார்  கீதா சரவணன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision