மணமகளுக்கு கிராண்டான ஆடைகள், நகைகள்... இனி வாடகைக்கு எடுக்கலாம்!

மணமகளுக்கு கிராண்டான ஆடைகள், நகைகள்... இனி வாடகைக்கு எடுக்கலாம்!

ஒவ்வொரு நிகழ்விற்கும் மணமக்கள் தாங்கள் அணியப் போகும் ஆடைகள் குறித்த முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாகவே இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்திற்கு ஒரு புடவை. திருமண சடங்கின் போது விலை உயர்ந்த பட்டுப் புடவை என்பதோடு ஆடை தேவைகள் முடிந்து போனது.

தற்போது, மெஹந்தி சாரி, ரிசப்ஷன் நிகழ்வுகளுக்கு லெஹங்கா, திருமண சடங்கிற்கு பட்டுப் புடவை, தொடர்ந்து நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முந்தானை மாற்றி அணியும் பேன்ஸி புடவை என விதவிதமான ரகங்களில் ஆடைகள் அணிந்து மணமகள் மேடையில் தோன்றுவாள். பெண்கள் பலருக்கும் தங்கள் ஆடையின் மீது அதிக அக்கறை இருக்கும். என்னதான் விதவிதமான ஆடைகளை வாங்கி அணிந்தாலும், 'தொலைக்காட்சியில் வரும் அந்த நடிகை அணிந்திருப்பதுபோல இல்லையே' எனப் புலம்புபவர்கள் அதிகம்.

 'அந்த நிகழ்ச்சிக்கு அப்படி ஆடை அணியணும், இந்த நிகழ்ச்சிக்கு இப்படி ஆடை அணியணும்' என அதிக விலையில் நாம் எடுக்கும் ஆடைகள், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, வார்ட்ரோப்பில் அலங்காரமாக மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கும். ''இந்த ரெண்டல் உங்களை பலவித லுக்கில் காட்டி அசத்துவதுடன் பணத்தையும் சேமிக்கும்'' என்கிறார், ஆன்லைன் மூலம் ஆடைகளை வாடகைக்குத் தரும் kehs Rentals 'நிறுவனத்தின் உரிமையாளர், கண்மணி ஸ்வாதி. இந்த ரென்டல் ஆடைகள் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

''நான் திருச்சி திருவெறும்பூர் கைலாஷ் நகரில் வசிக்கிறேன் இன்ஜீனியரிங் முடிச்சதும், எனக்குச் சுயதொழில் செய்யவே ஆர்வம். நிறைய ஐடியா பண்ணி, இறுதியில் ஆடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் இறங்கினேன்''. இது ஆன்லைன் பிஸினஸ்தான். ஆனால், இதில் வாடிக்கையாளருக்குச் சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் பிஸினஸ் பக்கத்துக்குள் வந்து, விரும்பிய ஆடைகளைத் தேர்வு செய்யலாம். திருமணம், பார்ட்டி, ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்டுக்கு என நிறையப் பிரிவுகளின் கீழ் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு, தனித்தனியாக பார்வைக்கு இருக்கும். அதில், தேவையானதைத் தேர்வு செய்யலாம்.

சில வாடிக்கையாளர்களுக்கு எந்த மாதிரியான ஆடைகள், தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும், எந்த நிகழ்ச்சிக்கு எந்த ஆடையைத் தேர்வுசெய்யறது எனக் குழப்பம் இருக்கும். அவங்களுக்காக, எங்கள் ஆன்லைன் பக்கத்தில் நாங்கள் வெளியிட்டிருக்கும் ஆடையில், எந்த ஆடையை வேண்டுமானாலும் தேர்வுசெய்யலாம். அவர்களின் உயரம், அளவுக்கு ஏற்ப மாற்றியமைத்து அவர்களின் முகவரியில் டெலிவரி செய்வோம்.

ஆடைக்கு ஏற்ற அணிகலன்களையும் எங்களிடம் தேர்வுசெய்யலாம். சிலருக்கு, 'வாடகை ஆடை அணிந்தால் அலர்ஜி வருமோ?' என்ற பயமும் சந்தேகமுமிருக்கும். நாங்கள் ஒவ்வோர் ஆடையையும் வெந்நீர், ஆன்டி-செப்டிக் லோசன்கள் பயன்படுத்தி துவைத்தே கொடுக்கறோம்''. திருச்சியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் கண்மணி ஸ்வாதி.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision