வீட்டிலிருந்து வருமானம் ஈட்ட உதவும் ஆரி டிசைன்கள்
தமிழ்நாட்டில் இப்போது டிரெண்டாக இருக்கும் வேலைகளில் ஆரி வேலைபாடும் ஒன்று. வீட்டில் இருந்தபடியே, குடும்ப தலைவிகளால் செய்யமுடிந்த வேலை என்பதால் இது வைரலாகி இருக்கிறது. அதேபோல, ஆரி வேலைபாடுகள் அடங்கிய பிளவுஸ் அணியும் பழக்கமும் தமிழ்நாட்டு பெண்களிடையே அதிகரித்திருக்கிறது. லினன், சில்க் காட்டன், கிரேப், சிந்தடிக் என எந்த ரக புடவையை அணிந்தாலும், மேட்சிங் பிளவுஸ்கள்தான் ஹைலைட்டான விஷயம்.
அதிலும், நாமே மேட்சிங் செய்யும் பிளவுஸ்கள் நம்மை இன்னும் கூடுதல் அழகாக்கிக் காட்டும். அதனால்தான் புடவையின் விலையைவிட பிளவுஸ் தைத்து வாங்குவதற்கான விலை சில நேரங்களில் அதிகமாகிவிடுகிறது. ஆரி தொழில் மூலமாக ஏழை குடும்ப தலைவிகளுக்கு புதிய வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே, குறைந்த கட்டணத்தில் ஆரி பயிற்சிகளை வழங்குகிறேன்'' என்று பேசத் தொடங்கினார்திருச்சி சிங்காரத்தோப்பில் ஆரி பயிற்சி மையத்தை நடத்தி வரும் கவிதா, எனக்கு பள்ளிப்பருவம் முதலே, நூல் வேலைப்பாடுகளில் அதீத ஆர்வம் உண்டு. அதனால் நூல் வேலைப்பாட்டின் நவீன 'அப்டேட்' ஆன ஆரி கலையை கற்றுக்கொண்டு முயன்றுபார்த்தேன்.
என்னுடைய தனிமை உணர்வை போக்கவும், ஓய்வு நேரத்திற்கான சிறந்த பொழுதுபோக்காகவும் ஆரி கலை இருந்ததால் அதோடு ஐக்கியமானேன். அதுசம்பந்தமாக தேடித்தேடி படித்தேன். புதிதாக நிறைய கற்றுக்கொண்டேன்'' என்றவர், வெகுவிரைவாகவே ஆரி கலையில் 'எக்ஸ்பர்ட்' ஆகிவிட்டார். https://www.instagram.com/sai_aari_tamil?utm_source=qr&igsh=MzNlNGNkZWQ4Mg ''ஒருகாலத்தில், டைலரிங் கலை பல குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது.
ஏழை குடும்பங்களின் வீடுகளில், நிச்சயம் ஒரு தையல் இயந்திரம் இருக்கும். அதை கொண்டு, ஓய்வு நேரங்களில் துணிகளை தைத்து, பெண்கள் சிறு வருமானம் சம்பாதித்தனர். இப்போதும், அந்த கலாசாரம் இருக்கிறது. ஆனால் ஆரி வேலைப்பாட்டிற்கு, தையல் இயந்திரமும் தேவையில்லை. கலை நுணுக்கமும், பொறுமையும் இருந்தால் போதும், வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ஒரு பிளவுசிற்கு குறைந்தது 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.
அதனால்தான் நடுத்தர குடும்ப பெண்கள் ஆரி கலை கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வீட்டில் இருந்துகொண்டே, கை நிறைய சம்பாதிக்க இது சிறப்பான கலை'' என்பவர், ஏழை குடும்ப பெண்களுக்கும், நடுத்தர கல்லூரி மாணவிகளுக்கும் இந்த கலையை கற்றுக்கொடுக்கிறார். குறைந்த கால கட்டத்திலேயே இவரிடம் பல மாணவர்கள் பெண்கள் ஆரி கலை பயின்றிருக்கிறார்கள்.''ஆரி கலையை யார் வேண்டுமானாலும் கற்கலாம். வயது வித்தியாசம் இல்லை. பள்ளி குழந்தைகள் முதல் 50 வயதை கடந்த மூத்த குடும்ப தலைவிகள் வரை பலரும் என்னிடம் ஆரி கலை பயின்று, அதன்மூலம் சம்பாதிக்கின்றனர். ஆரி கலையை கற்பதும், அதை செய்து பார்ப்பதும் மிக சுலபம்தான். தேவையும், ஆர்வமும் இருப்பவர்களால், 10 நாட்களிலேயே கற்றுக்கொள்ள முடியும். இதற்கு முதலீடு என்பது பெரிதாக இருக்காது.
ஆரி வேலைப்பாடு செய்ய ஆரி ஸ்டாண்ட், ஆரி நீடில், சில்க் நூல், கோல்டன் திரெட், ஜதோஷி, கலர் பீட்ஸ், கற்கள்... இப்படி சின்ன சின்ன பொருட்கள்தான் தேவைப்படும். ஆனால் இதை கொண்டு ஆடைகளை அழகாக்க, நிறைய பொறுமையும், கலைநுணுக்கமும் அவசியம். அதுதான் இந்த கலையின் முதலீடு'' என்று பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். ''வடமாநில கலாசாரம் தமிழ்நாட்டில் அதிகமாக தென்படுகிறது. அதில் ஆரி கலாசாரமும் ஒன்று. பிளவுஸ் மட்டுமின்றி, ஜிப்பா, கோட்-சூட், சட்டை, ஷெர்வானி போன்ற ஆண் உடைகளிலும், நகைகளிலும் ஆரி வேலைப்பாடுகள் வர தொடங்கிவிட்டன.ஆரி வேலைகள் செய்து கொடுப்பதற்காகவே, வட மாநிலங்களில் இருந்து பல குடும்பங்கள் தமிழ்நாட்டிற்குள் குடியேறி இருக்கிறார்கள். நிறைய தேவை இருக்கும் வேலை என்பதால் பலரும் வீட்டிலேயே ஆரி வேலைப்பாடுகளை செய்கிறார்கள்.
சிலர் சுய உதவி குழுக்கள் மூலமாக ஆரி வேலைகள் செய்கிறார்கள். ''எல்லா குடும்பங்களிலும் பணத் தேவை இருக்கும். அதை ஈடுகட்ட குடும்ப பெண்களும் முயற்சிப்பார்கள். அந்தவகையில், அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியாக ஆரி பயிற்சிகளை வழங்குகிறேன். இது அவர்களது தேவையை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். அவர்களது மகிழ்ச்சியில்தான் என்னுடைய மனநிறைவு இருக்கிறது'' என்று மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆரி கலையை கற்பதும், அதை செய்து பார்ப்பதும் மிக சுலபம்தான். தேவையும், ஆர்வமும் இருப்பவர்களால், 10 நாட்களிலேயே கற்றுக்கொள்ள முடியும். கல்லூரி மாணவர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களையும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் விடுப்பு நாட்களையும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் இரண்டே மாதங்களில் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு கோடைக்கால பயிற்சியாக ஆரிப்பயிற்சி வழங்க உள்ளேன்.
ஆரி பயிற்சியை கற்றுக் கொள்ள 9894184314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆரி கலையைப் பொறுத்தவரை இவ்வளவுதான் மாத வருமானம் என்பதில்லை நம்முடைய நேரத்தையும் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதிலே உள்ளது குறைந்தபட்சமாக மாதம் 500 முதல் நம்மால் எவ்வளவு முடியும் என்று நாமே தீர்மானித்து மாத வருமா னத்தினை ஈட்டலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision