திருச்சி தில்லைநகரில் அலங்கார நகைகள், திணை உணவு வகைகள் என அசத்தும் ஜெயஸ்ரீ சுரேஷ்

திருச்சி தில்லைநகரில் அலங்கார நகைகள், திணை உணவு வகைகள் என அசத்தும் ஜெயஸ்ரீ சுரேஷ்

திருச்சி தில்லை நகரில் பஸ்ட் கிராப்ட் என்ற பெயரில் ஆறு ஆண்டுகளாக 9 வகையான மணப்பெண் அலங்கார நகைகள் தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருபவர் ஜெயஸ்ரீ சுரேஷ்.

புதிய புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வமும் தன்னிடமுள்ள தனித்துவத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே என்னை ஒரு தொழில்முனைவோராக மாற்றியது என்கிறார் ஜெயஸ்ரீ சுரேஷ்

தான் கற்றுக் கொண்டதை பிறருக்கும் கற்றுக் கொடுத்து பல கல்லூரி மாணவர்களை தொழில் முனைவோருக்கான பயிற்சி அளித்து அவர்களையும் தொழில் முனைவோராக மாற்றி வருகிறார்.

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் அதிலும் விருப்பமான நகைகளை தேர்வு செய்வது தனித்துவமாக காட்டிக் கொள்வதில் பெண்கள் அதிக முயற்சியில் ஈடுபடுவர். ஒரு பெண்ணாக என்னுடைய எண்ணமும் அப்படிதான் இருந்தது. எனக்கும் என் திருமணத்திற்கு பின்பு என் இரண்டு குழந்தைகளுக்கும் பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்டு இன்றைக்கு எனக்கான ஒரு அடையாளத்தையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது இந்த கலை.

டெரகோட்டா, டாட் மண்டலா ஆர்ட், சில்க் த்ரெட் ஆர்ட்,ஹேண்ட் பெயிண்டர் ஜுவல்லரி,கெம்ப் ஜுவல்லரி, ஆக்சிடைஸ்ட் ஜுவல்லரி, ஆன்டிக் ஜுவல்லரி, செமி பிரிஸீயஸ் ஜூவல்லரி, பாலிமர் கிளே ஜுவல்லரி இப்படி ஒன்பது வகையான அலங்கார நகைகள் வீட்டிலேயே தயார் செய்து இணையதளம் மூலமும் விற்பனை செய்து மாதத்தில் 70 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

சிறுவயதிலிருந்தே புதிதாக ஒன்றை உருவாக்குவதில் அதிக ஆர்வம், வண்ணங்களின் மீதான காதலால் ரங்கோலி போடுவதில் தொடங்கியது என்னுடைய பயணம் புதிது புதிதாக பல வண்ணங்களில் புதிய முறைகளில் போடத் தொடங்கியது நாளடைவில் எனக்கான ஒரு அடையாளமாக மாறிப் போனது பல ரங்கோலி போட்டிகளில் போட்டியாளராக கலந்து கொண்டேன் பின்னர் போட்டிகளில் நடுவராகவும் சென்றிருக்கிறேன்.

அப்படி அடுத்தகட்ட முயற்சிதான் இந்த ஒன்பது வகையான அலங்கார நகைகள் பல பெண்கள் திருச்சி போன்ற நகரங்களில் இவை கிடைக்காது என்று எண்ணினர். அந்த எண்ணத்தை மாற்றவே நம்மிடம் இருப்பதை வைத்தே தயாரிக்க முடியும் என்பதை உறுதி செய்து விற்பனை செய்யத் தொடங்கினேன்.

நண்பர்கள் மூலமாக நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது அவர்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பலரும் விரும்பி வாங்க தொடங்கினர். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இது போன்ற அலங்கார நகைகள் அதிகம் விரும்பினர் பரிசு அளிப்பதற்கும் தங்களுக்கு பயன்பாட்டிற்காகவும் வாங்க ஆரம்பித்தனர்.

சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் என்னுடைய தயாரிப்புகளை பதிவிட்ட போது இதன் மூலம் பல சமூக வலைதளம் நிறுவனங்களில் இருந்து என்னை தொடர்பு கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் இருந்து கிடைத்துள்ளனர்.

அதே போன்ற மணப்பெண் அலங்காரங்களில் வாடகை நகைகளை அதிக பேர் தேர்வு செய்வது வழக்கம் இப்போதெல்லாம் பெண்கள் தங்களுடைய புடவைக்கு ஏற்றவாறு நகைகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே அவர்கள் எங்களிடம் சொல்லும் டிசைன்களில் 1, 2 நாட்களில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தயார் செய்து கொடுக்கிறோம்.

இந்த ஆறு ஆண்டுகால பயணத்தில் பல மாணவர்களை இதன்மூலம் பயன்பெற்றுள்ளனர். அவர்களும் என்னுடன் இணைந்து பயணித்து வருகின்றனர். இதுவரை நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் எனக்கு பிடித்தமானதும் என்னால் முடிந்ததையுமே செய்து வருகிறேன் அப்படி அடுத்த கட்டமாக தொடங்கியதுதான் திணை வகைகள் மூலம் உணவு விநியோகம்.

பாரம்பரிய அரிசி வகைகளையும் தினை வகைகளை பயன்படுத்திபயன்படுத்தி தோசை மாவு ஆப்ப மாவு தயார் செய்து விற்பனை செய்து வந்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதையடுத்து 35 வகை மாவு விற்பனை செய்து வருகிறேன்.

பண்டிகை காலங்களில் திணைகளை பயன்படுத்தியே 7 -15 வகை இனிப்புகளை சிறியவர் முதல் பெரியவர்களின் ஆரோக்கியத்துக்கும் ஏற்றவாறு தயார் செய்து விற்பனை செய்கிறேன். பிடித்தவற்றையும் ஆரோக்கியமான ஒன்றையும் அளிப்பது தனிப்பட்ட வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.

இதற்காக வேலையாட்களை பயன்படுத்தாமல் நானே இதற்கு முழுவதுமாக வேலை செய்வேன். இவை அனைத்துமே எனக்கான வருமானத்தை ஈட்டித் தரும் ஒன்றாக அமைந்த போது சமூகத்திற்கான அக்கறை கொண்டு ஏதேனும் செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வகுப்புகளையும் தொடர்ந்துபல சமூக நல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நடத்தி வருகிறோம்.

தரம், நேரம், நேர்மை, தனித்துவம் இவற்றில் எப்போதுமே சமரசம் செய்துகொள்வதில்லை நல்ல பெயருடன் நிறைய ஆர்டர்கள் எடுக்க இதுவே உதவியாக அமைந்தது. ஆன்லைன் வர்த்தகம் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தொடர்ந்து பயணிக்க வைத்து என்னுடைய வெற்றிக்கு என்னுடைய அம்மா சுகந்தா என் அப்பா மனோகர் மற்றும் என் கணவர் சுரேஷ்குமார் மற்றும் குடும்ப உறவினர்கள் அனைவருமே உறுதுணையாக இருந்தனர். அவர்களுடைய ஒத்துழைப்பும் என்னை நம்பிய வாடிக்கையாளர்களும், சிறந்த தொழில் முனைவோராக்காக கிடைக்கப் பெற்ற விருதுகளும் என்னை தொடர்ந்து பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது தொடர்ந்து பல மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சி அளித்து பல தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற எதிர்கால திட்டத்தோடு செயல்பட்டு வருகிறார் ஜெயஸ்ரீ சுரேஷ்குமார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn