திருச்சியில் 1 ரூபாய்க்கு பிரியாணி - அசத்தி வரும் THE FOODIEE நிறுவனம்!

திருச்சியில் 1 ரூபாய்க்கு பிரியாணி - அசத்தி வரும் THE FOODIEE நிறுவனம்!

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் வரும் வசனம் போல ஒரு ரூபாய்க்கு பறக்க மட்டும் தான் முடியுமா என்பதை போல தற்போது திருச்சியில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி கொடுத்து அசத்தி வருகின்றனர்.

Advertisement

The FOODIEE மற்றும் Murgee Chicken இணைந்து இந்த வாரத்தின் 4 நாட்களை பிரியாணி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

தி ஃபுட்டீ நிறுவனம் முதன்முதலில் திருச்சியை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக இருந்து வந்தது. இதில் உணவகங்களில் உணவு களை பெற்று திருச்சியில் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வந்தனர். திருச்சிகென்று தனியாக உணவு டெலிவரி செய்ய களமிறங்கிய முதல் ஆஃப் இந்த FOODIEE தான். குறிப்பாக நம்ம ஊர் இளைஞர்கள் வெற்றிகரமாக ரன் பண்ணும் நிறுவனமும் கூட.

திருச்சி மக்களுக்காக ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்தியுள்ளனர். தினமும் முதலாவதாக ஆர்டர் செய்யும் 50 நபர்களுக்கு இன்று முதல் பிரியாணி வழங்க ஆரம்பித்துள்ளனர். இது வருகின்ற சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் 1 ரூபாய்க்கு பிரியாணி கொடுக்க உள்ளனர்.

THE FOODIEE APP-ல் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ரூபாய் பிரியாணிக்கான ஆஃபர் வெளியாகும். இதில் முதலாவது ஆர்டர் செய்யும் 50 நபர்களுக்கு 1 ரூபாய்க்கு பிரியாணி சென்று டெலிவரி செய்கின்றனர்.

இதுகுறித்து THE FOODIEE நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜந்தத்திடம் பேசினோம்... "ஒரு ரூபாய் பிரியாணி திட்டம் திருச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்துள்ளார்கள். சிலர் இது போலியானது என்று சொன்னாலும் நாங்கள் இன்று அதை உண்மையாக நிரூபித்து இருக்கிறோம். திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல மக்களிடமிருந்து வரவேற்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இன்று சரியாக 12 மணிக்கு வெப்சைட்டின் ஆர்டர் ஆன் செய்யும் போது சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பிரியாணி ஆர்டர் செய்ய முந்தியதால் ஸ்தம்பித்துப் போய்விட்டோம். இருந்தாலும் முதலாவதாக ஆர்டர் செய்த 50 நபர்களுக்கு பிரியாணியை வெற்றிகரமாக டெலிவரி செய்தோம். 199 ரூபாய் மதிப்புள்ள பிரியாணியை ஒரு ரூபாய்க்கு இன்று கொடுத்துள்ளோம் இதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கும் கொடுக்க உள்ளோம்" என்றார்

Advertisement

மேலும் இதுகுறித்து Murgee Chicken நிறுவனத்திடம் பேசும்போது... ஒரு ரூபாய்க்கு பிரியாணி கொடுப்பது சாத்தியமற்றது தான், ஆனால் அதை நாங்கள் மெய்ப்பித்து இருக்கிறோம். ஒன்லி THE FOODIEE மட்டும்தான் இணைந்து இந்த சேவையை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கொடுக்க உள்ளோம்" என்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm