நிவர் புயல் காரணமாக வேல் யாத்திரை ரத்து - திருச்சியில் பாஜக மாநில தலைவர் முருகன் பேட்டி!
பாஜக மாநில தலைவர் வேல்முருகன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... நிவர் புயல் காரணமாக ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக மதுரை, திருச்செந்தூர், தேனி ஆகிய மாவட்டங்களிலும் வேல் யாத்திரை, புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
Advertisement
டிசம்பர் நான்காம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு மட்டும் நடத்தி விட்டு டிசம்பர் 5 ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறும். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் பா.ஜ.க வினர் ஈடுபடுவார்கள். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து அ.தி.மு.க உறுதி செய்த நிலையில் பா.ஜ.க தரப்பில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் அறிவிக்கும். எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கலந்தாலோசித்து அறிவிக்கப்படும்.
Advertisement
அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆலோசனையில் பா.ஜ.க விற்கு 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு யூகம் தான். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார். சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் அறிவிப்பார் என கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறியhttps://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm